“இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம், என் செல்லமே!” – பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீம் வெளியிட்ட பதிவு. ​​​​​​​

photo

ரியாலிட்டி ஷோக்கள் பல வந்தாலும் ‘பிக்பாஸ்’க்கு உண்டான மோகம் எப்போதும் குறைந்தது இல்லை. அந்த வகையில் தற்போது சீசன் 6 முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் அசீம் டைட்டில் வின்னராக  அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து    அசீம்மிற்கு ஐம்பது லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் அசீம் போட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

photo

அதாவது அசீம் தான் வென்ற அந்த கோப்பை மற்றும் ஐம்பது லட்சத்திற்கான காசோலையோடு தனது மகன் ரயான் உடன் அழகிய புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவுடன் “ எந்து உயரம் உனது இலக்கல்ல…..நீ உயரனும் என்பதே என் இலக்கு…! இந்த வெற்றி எனக்கு சமர்ப்பணம், என் செல்லமே!” என பகிர்ந்துள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் இந்த பதிவிற்கு ஹார்ட் எமோஜிகளை வழங்கி, வெற்றிபெற்ற அசீமிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  

photo

Share this story