பிக்பாஸ் சீசன் 6- இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்…

photo

பிக்பாஸ் சீசன் 6-லிருந்து இந்த வாரம் வெளியேற போவது யார் என்ற தகவல் கசிந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 துவக்கம் முதலேயே சுவாரசியமாக நடந்துவருகிறது. அனைத்து போட்டியாளர்களும் துடிப்போடு விளையாடி வருகின்றனர். இந்த வகையில் வாரா வாரம் யாரவது ஒருவர் மக்களிடம் குறைவான ஆதரவு பெற்று எலிமினேட் செய்யப்படுகின்றனர்.

photo

அந்த வரிசையில் தனது குடும்பத்தை பார்க்காமல் தன்னால்  இருக்க முடியவில்லை என்று கூறி ஜிபி முத்து  வெளியேறினார்அவரைத்தொடர்ந்து சாந்திஅசல் கோலார், ஷெரீனா என அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டனர். அந்த வகையில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என மக்கள் ஆவலாக காத்துள்ளனர். 

photo

இந்த வாரம் அசீம், மகேஸ்வரி, தனலட்சுமி, ராம், ஏடிகே, விக்ரமன், ஆயிஷா உள்ளிட்ட 7 பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரமும் ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன் உள்ளிட்ட சிலர் நாமினேஷனில் இடம் பெறாமல் எஸ்கேப் ஆகிவிட்டனர். ரச்சிதா, விஜே கதிரவன், ஷிவின் உள்ளிட்டவர்களும் சேஃப் சோனில் உள்ளனர்.

photo

இந்தவாரம் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் எடிகே, ராம் மற்றும் மகேஷ்வரி குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் மகேஷ்வரி தான் வெளியேறுவார் என பலருமே கூறிவருகின்றனர். இந்த வாரம் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து நடையை கட்ட போவது உறுதியா? இல்லாயா? எனபதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story