பிக்பாஸ் சீசன் 7: முதல் விக்கெட் அவுட்டு- யார் தெரியுமா?

photo

பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஒன்றாம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் வாரமே காரசார விவாதம் என கலைகட்டியுள்ள பிக்பாஸ்ஸில் யார் முதல் ஆளாக எலிமினேட் ஆனார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

வழக்கம் போல அல்லாமல் இந்த முறை பிக்பாஸ்  வீடு இரண்டு வீடாக பிரிந்து பிக்பாஸ், சுமால் பாஸ் வீடு என உள்ளது. அதில் பிக்பாச் வீட்டை விட சுமால் பாஸ் வீட்டில் வசதி சற்று குறை வாராவாரம் கேப்டனை கவராத நபர்கள் சுமால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். அந்த வகையில் முதல் வாரத்தில் நிக்சன், பாவா செல்லதுரை, வினுஷா, ஐஷூ, அனன்யா, ரவீனா என ஆறு நபர்கள் சென்றனர். இந்த நிலையில் முதல் வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரவீனா, ஐஷூ, பிரதீப், அனன்யா, ஜோவிகா, யுகேந்திரன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். அதில் முதல் விக்கெட்டாக அனன்யா வீட்டை விட்டு சென்றுவிட்டதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

photo

Share this story