வைல்டு கார்டு என்ட்ரியாக வரும் பிரபலம்... பிக்பாஸ் முடிவால் இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் !

bigg boss 6 kamal

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி பிரபலம் ஒருவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் யார் டைட்டிலை வின் செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

biggboss 6

அந்த வகையில் கடந்த வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் வலுவான போட்டியாளராக தனலட்சுமி இருந்து வந்தார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தனர். இருந்தபோதிலும் தனலட்சுமி அதிரடியாக வெளியேற்றப்பட்டார். தனலட்சுமி வெளியேற்றப்பட்ட குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் அதிக கன்டென்ட் கொடுத்தவரே தனலட்சுமிதான். அவரை எதற்காக பிக்பாஸ் நீக்கினார் என புலம்பி வந்நதனர். 

இந்நிலையில் பிக்பாஸில் வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் தனலட்சுமியை கொண்டு வர விஜய் டிவி நிர்வாகம் பேசி வருகிறதாம். இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் முன்பை விட அதிகம் சம்பளமும் கொடுக்கப்படவிருக்கிறதாம். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story