ஹீரோவாகும் பிக்பாஸ் அசீம்... அட.. இயக்குனர் இவரா ?

azeem

 புதிய படம் மூலம் பிக்பாஸ் அசீம் ஹீரோவாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ்.  இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசனில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அசீம். ஆனால் அசீம் வெற்றிப் பெற்றாலும் அவரை சுற்றி சர்ச்சையும் சூழ்ந்துக் கொண்டேதான் இருந்தது. அதனால் ரசிகர்கள் ஆதரவு அவருக்கு இல்லாதபோதும் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஹீரோவாகும் பிக்பாஸ் அசீம்... அட இயக்குனர் இவரா ?

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றாலே எளிதில் சினிமாவில் நுழைந்து விடலாம். அந்த வகையில் பிக்பாஸ் வின்னரான அசீம், புதிய படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கவுள்ளார். 

 இந்த படத்தின் லோகேஷன் பார்க்க தற்போது ராஜஸ்தானில் இயக்குனர் பொன்ராம் முகாமிட்டுள்ளனர். பொன்ராம் ஸ்டைலிலேயே உருவாகும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த நிறுவனம் படத்திற்கான அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகிறது.  ‌ 

Share this story