ஒன்றுக்கூடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்... விஜே மகேஸ்வரி கொடுத்த பார்ட்டி !

bigboss

 பிக்பாஸ் போட்டியாளர்களை தனது வீட்டிற்கு அழைத்து விஜே மகேஸ்வரி பார்ட்டி கொடுத்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி நிகழ்ச்சிகளில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது பிக்பாஸ். அதிலும் கடைசியாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் 6 நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றது. 106 நாட்கள் ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சியில் சண்டைக்கும், சர்ச்சரவுக்கும் பஞ்சமே இல்லை. 

bigboss

இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியாளராக தேர்வான விக்ரமன் கண்ணியமாகவும், அசீம் பெண் போட்டியாளர்களை தரக்குறைவாக நடத்தினார். இதனால் விக்ரமன் தான் பிக்பாஸ் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அசீம் டைட்டில் வின்னரானார். அசீமுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்தது சர்ச்சையாக வெடித்தது. 

bigboss

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகும் இந்த சர்ச்சை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் இரு பிரிவுகளாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸில் கலந்துக்கொண்ட விஜே மகேஸ்வரி, சக போட்டியாளர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்துள்ளார். இந்த விருந்தில் ரக்ஷிதா, ஷிவின், விக்ரமன், ஷெரினா, ராம், ஏ.டி.கே, அசல் கோளாறு ஆகியோர் கலந்துக்கொண்டனர். இது குறித்த புகைப்படங்களை விஜே மகேஸ்வரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 


 


 

Share this story