அன்ஷிதாவை பாட்டியாக்கிய பிக்பாஸ்.. சூடு பிடிக்கும் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்..!

big boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 17 வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்த வாரம் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும், நேற்றைய எபிசோடில் பவித்ரா ஜனனியை மேனேஜர் போஸ்டில் இருந்து தூக்க வேண்டும் என்று ஆண்கள் அணி செய்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.


இந்த நிலையில், ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் இன்றும் தொடர உள்ள நிலையில், இன்றைய டாஸ்க்கில் ஆண்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டலில் பெண்கள் விருந்தினராக வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பெண் போட்டியாளர்களுக்கும் வித்தியாசமான கெட்டப் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்ஜே ஆனந்தி மற்றும் பவித்ரா ஜனனி ஆகிய இருவரும் மாமியார் மருமகள் வேடம் போட்டுள்ளனர்.



பாட்டி மற்றும் பேரன்கள் ஆக அன்ஷிதா மற்றும் ஜெஃப்ரி வேடம் போட்டு வந்துள்ளனர். அதேபோல், ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு கெட்டப் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், விருந்தினர்களான பெண்கள் அணியை ஆண்கள் அணி வரவேற்பதும், உபசரிப்பதுமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


இந்த ப்ரோமோ வீடியோவில் இருந்து, இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே அடிதடி சண்டை, வாக்குவாதங்களை பார்த்து போரடித்த பார்வையாளர்களுக்கு, இன்றைய காமெடி கலந்த கலகலப்பான எபிசோடு நிச்சயமாக திருப்தியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story