தனலட்சுமி பளார் அறை வாங்குவார் - கமலிடம் சொன்ன அசீம் !

biggboss 6

தனலட்சுமி பளார் அறை வாங்குவார் வாங்குவார் என்று  கமலிடம் அசீம் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸில் காரசார போட்டியாளர் யார் என்று கேட்டால் தனலட்சுமி என எளிதில் கூறிவிட முடியும். அந்த அளவிற்கு சண்டை, சர்ச்சரவு எல்லாவற்றிலும் சிக்குபவர் தான் தனலட்சுமி. முதல்முதலில் ஜிபி முத்துவிடம் தொடங்கி அசீம், மணிகண்டன் என அடுத்தடுத்து சண்டை போட்டு வருகிறார். 

biggboss 6

அதேநேரம் தனது தரப்பு நியாயத்திற்காக சண்டை போடும் நிலையில் அசீம் தேவையில்லாமல் தனலட்சுமியை சீண்டி கடந்த வாரம் கமலிடம் வாங்கிக் கொண்டார். ஆனாலும் அடுத்தடுத்த டாஸ்க்குகளில் இந்த சண்டை தொடரத்தான் செய்கிறது. 

biggboss 6

இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் போட்டியாளர்களிடம் கமல் பேசி வருகிறார். அதில் அமுதவாணன் இந்த வீட்டில் யாரை பர்சனல் அட்டாக் செய்கிறார் என்று கேட்கப்படுகிறது. அதற்கு நகைச்சுவை என்ற பெயரில் பர்சனல் அட்டாக் செய்கிறார் என்று விக்ரமன் கூறுகிறார். இதேபோன்று இங்கு நடப்பது போன்று வெளியில் நடந்துக் கொண்டால் பளார் என்று அறைதான் வாங்குவார் என்று கேட்கப்படுகிறது. அதற்கு போட்டியாளர்கள் சொல்லும் சுவாரஸ்சிய பதில்கள் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாக உள்ளது.   


 

Share this story