ஏமாற்றிய ரச்சிதா.. கதறி கதறி அழும் ராபர்ட் மாஸ்டர் !

biggboss 6

டாஸ்க்கில் ரச்சிதா ஏமாற்றியதால் ராபர்ட் மாஸ்டர் கதறி கதறி அழும் காட்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அதில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா ஆகிய இருவரும் ராஜா ராணியாக இருக்கின்றனர். ஏற்கனவே ரச்சிதாவிடம் காதல் தொல்லை கொடுத்த வரும் ராபர்ட் மாஸ்டருக்கு இது வசதியாக இருக்கிறது. 

 biggboss 6

இந்நிலையில் இன்றைய எபிசோடில் அசீம் மற்றும் ரச்சிதா ஆகிய இருவரும் டாஸ்க்கின்படி விளையாடுகின்றனர். அதன்படி மேப் ஒன்றை வைத்து மியூசியத்தில் பொருள் ஒன்றை திருடவேண்டும். அதன்படியே அந்த பொருளை அசீம் மற்றும் ரச்சிதா ஆகிய இருவரும் திருடுகின்றனர். இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் அசீம் மற்றும் ரச்சிதா திருடியதை பிக்பாஸ் அனைவரிடம் சொல்கிறார். 

biggboss 6

இதை கேட்ட ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று கதறி கதறி அழுகிறார். ராபர்ட் மாஸ்டர் அழுவதை பார்த்து சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். அதேபோன்று ரச்சிதாவும் சமாதானப்படுகிறார். ஆனால் இந்த சமாதானத்தை ராபர்ட் மாஸ்டர் ஏற்கவில்லை. ஒரு டாஸ்கில் நடந்த சாதாரண விஷயத்தை வைத்து ராபர்ட் மாஸ்டர் இப்படி செய்வது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு என்று ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.


 

Share this story