அவன் எங்க கையை வைத்தான் தெரியுமா ?... கதறி அழும் தனலட்சுமி !

 biggboss 6

 பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமியிடம் அசீம் அத்துமீறி நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது. 

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் வீடு. அதனால் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த டாஸ்குகளில் போட்டியாளர்கள் ஆர்வமுடன் விளையாடி வருகின்றனர். 

 biggboss 6

இந்த நிகழ்ச்சியில் சர்ச்சை மன்னனாக வலம் வருவது அசீம் தான். தொடர்ந்து அசீம் ஒவ்வொரு போட்டியாளர்களுடனும் பயங்கரமாக சண்டை போட்டு வருகிறார். அந்த வகையில் பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமியிடம் அசீம் சண்டை போடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. பஸ்ஸர் அடித்தவுடன் ஓடி செல்லும் அசீம், பொம்மையை வைக்கும் அறைக்கு செல்கிறார். அப்போது குறுக்கே நிற்கும் தனலட்சுமி தள்ளிவிட்டு செல்கிறார். 

 biggboss 6

இந்த காட்சி குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் தனலட்சுமியை வேகமாக அசீம் தள்ளி விடுகிறார். இதனால் தனலட்சுமி மற்றும் அசீம் இடையே காரசார சண்டை ஏற்படுகிறது. டாஸ்க் முடிந்தபிறகு சக போட்டியாளர்களிடம், அசீம் கேட்ட கேள்விகள் குறித்து பேசுகிறார். என்னை தள்ளி விடும்போது அவன் எங்கே என்னை தொட்டான் தெரியுமா என்று கூறி கதறுகிறார். தனலட்சுமியிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் அசீமின் செயலுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


 

Share this story