'பழியை போடுறது ஈசி.. அதை தாங்குறது ரொம்ப கஷ்டம்' - வெளுத்து வாங்கவிறக்கும் கமல் !

biggboss 6

இந்த வாரம் போட்டியாளர்களை வெளுத்து வாங்கவிருக்கும் கமலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. தற்போது 50 நாளுக்கு பிறகு நடக்கவேண்டிய சண்டை மற்றும் சர்ச்சரவுகள் இப்போதே நடந்தேறி வருகிறது. இதனால் தான் உச்சக்கட்ட பரபரப்புடன் செல்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஏற்கனவே பெண் போட்டியாளர்களிடம் அசல் கோலார் செய்யும் சேட்டைகள் ரசிகர்களின் முகம் சுளிக்க வைக்கிறது. 

biggboss 6

இதேபோன்று ஒவ்வொரு பெண் போட்டியாளர்களிடம் மல்லுக்கட்டி வருகிறார் அசீம். அந்த வகையில் பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமியிடம் தொடர்ந்து அசீம் சண்டை போட்டு வருகிறார். இதனால் தனலட்சுமி கதறி காட்சிகள் வெளியாகின. மற்றொருபுறம் ஜனனி தனக்கு எதிராக நடக்கும் விஷயங்களை பிக்பாஸிடம் கூறி கண்ணீர் விடுகிறார். இப்படி பல பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட இன்று சனிக்கிழமை என்பதால் இது குறித்து கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.  

biggboss 6

போட்டியாளர்களிடம் சாட்டையடி கேள்வி எழுப்ப உள்ள கமலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பேசும் கமல், என்ன நடந்தது என்பது எனக்கும் தெரியும்,  உங்களுக்கும் தெரியும். ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அது தெரியவில்லை. பழி போடுவது ரொம்ப ஈசி. ஆனால் அந்த பழியை தாங்குவது மிக மிக கடினம். அதை அவங்களுக்கு புரிய வைக்கவேண்டும். சில பேரை காப்பாற்றி ஆக வேண்டும். சில பேரை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கமல் கடுமையாக பேசியுள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


 

Share this story