தனலட்சுமிக்கு எதிராக பொங்கி எழுந்த ஹவுஸ்மேட்டுகள்.. சுவாரஸ்சிய ப்ரோமோ வெளியீடு !

biggboss

தனலட்சுமியை கழுவி கழுவி கூற்றும் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமியை வைத்து அனைத்து விஷயங்களும் நகர்ந்து வருகிறது. பிக்பாஸ் ஆரம்பத்தில் ஜிபி முத்து தொடங்கி ஆயிஷா, அசீம், ராபர்ட் மாஸ்டர் என அனைவரும் தனலட்சுமி சண்டை போட்டு வருகிறார். அதனால் தனலட்சுமியை வைத்தே பிக்பாஸ் காய் நகர்த்தி வருகிறார். 

biggboss

நேற்றுக்கூட அசீமுடன் தனலட்சுமி போட்ட சண்டைதான் பிக்பாஸ் வீட்டின் ஹாட் டாப்பிக். இதையடுத்து எந்த குணத்தை தனலட்சுமி மாற்றிக் கொண்டால் மேம்பட முடியும் என்று ஹவுஸ்மேட்டுகள் கருத்து கூறவேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். இது மீண்டும் தனலட்மியை வைத்தே அடுத்த கேமை பிக்பாஸ் நகர்த்துவதை புரிந்துக் கொள்ள முடிகிறது. 

அதன்படி யாரை வேண்டுமானாலும் ட்ரிக்கல் பண்ண முடியும் என்று ஷெரினா முதல் நபராக பேசுகிறார். இதையடுத்து எதையும் எடுத்தோம் கவிழ்தோம்னு பண்ணாத. பட்டு பட்டுன்னு பேசாத என ராபர்ட் மாஸ்டரும், கொஞ்சம் பொறுமையை கடைபிடித்தால் எங்கேயோ போகலாம் என்று அடுத்தடுத்து தனலட்சுமிக்கு எதிரான புகார்களை அடுக்குகின்றன. இதனால் நிச்சயம் இன்றைய எபிசோடு சுவாரஸ்சியமாகவே இருக்கும் என தெரிகிறது. 

 

 


 

Share this story