ஷெரீனாவிற்கு இந்த அசிங்கம் தேவையா ?... பங்கமாக செய்த ஆண்டவர் !

biggboss 6

 ஷெரீனாவிற்கு கமல் கொடுத்த ஷாக், ஹவுஸ்மேட்டுகளை வாய் அடைக்க செய்துள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் 6வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார் ஆகியோர் வெளியேறி விட்டனர். அதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. 

biggboss 6

அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஷெரீனா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த ஷெரீனா, சக போட்டியாளர்களிடம் எப்போது மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் பேசி வந்தார். தமிழில் பேசவேண்டும் என்று பலமுறை அவரை கமல் எச்சரித்தும் அதை கண்டுக் கொள்ளவில்லை. 

biggboss 6

இந்நிலையில் இந்த வார எலிமினேட் யார் என்பதை மலையாளத்தில் எழுதியிருக்கும் கார்ட்டை கமல் காண்பித்தார். இதை பார்த்த ஹவுஸ்மேட்டுகள் ஷாக்காகி நின்றனர். ஏனென்றால் ஷெரீனா மலையாளத்திலேயே பேசி வந்ததால், அவருக்கு புரியவேண்டும் என்பதற்காக மலையாளத்தில் பொறிக்கப்பட்ட கார்ட்டை கமல் காட்டினார்.  ஷெரீனாவிற்கு இப்போதாவது புரியட்டும் என்று நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர். 


 

Share this story