பிக்பாஸ் வீட்டிற்கு வந்த கதிரின் காதலி.. கதறி கதறி அழுத ஷிவின் !

biggboss 6

 கதிரின் காதலி பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததால் ஷிவின் கதறி கதறி அழுத காட்சி வெளியாகியுள்ளது. 

ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் வீட்டில் காதல் மலர்வது சகஜம். அந்த வகையில் கதிரை ஷிவின் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

biggboss 6

அந்த வகையில் போட்டியாளர்களின் உறவினர்கள் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டிற்கு வந்த சர்ப்ரைஸ் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்கு கதிரின் காதலியான சினேகா ரவி சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். தனது காதலியை பார்த்த மகிழ்ச்சியில் கதிர் திக்குமுக்காடி போனார். 

biggboss 6

அப்போது ஒரு ஓரமாக ஷிவின் படுத்துக் கொண்டார். அப்போது ஷிவினை பார்த்து நெஞ்சுக்குள் இன்னாருன்னு சொன்னா புரியுமா என பாடினார். இதனால் பொசஸிவான ஷிவின் படுக்கையிலேயே கதறி கதறி அழ ஆரம்பித்து விட்டார். ஏன் அழுகிறாய் என ஷிவினை அனைவரும் கேட்க அவர் பாத்ரூமிற்கு சென்றுவிட்டார். இது பிக்பாஸ் வீட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 

Share this story