இனிமே என் கேம எப்படி விளையாடுகிறேன் பாருங்க... ஆட்டத்தை தொடங்கிய தனலட்சுமி !

biggboss 6

பிக்பாஸ் வீட்டில் புதிய கேமை தொடங்கப்போவதாக தனலட்சுமி ஆக்ரோஷமாக கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் கொடுப்பதும், அதில் போட்டியாளர்களிடையே சண்டை வருவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. 

biggboss 6

இந்த டாஸ்க்கில் நீதிபதியாக ஏடிகேவும், வழக்கறிஞராக விக்ரமனும், அசீம் உள்ளனர். அமுதவாணன் வழக்கு தொடர அவருக்கு வழக்கறிஞராக அசீம் உள்ளார். இதனால் விக்ரம் மற்றும் அசீம் இருவரும் வாதாடி எப்போதும் போல் சண்டை போட்டுக் கொள்கின்றனர். 

biggboss 6

அதேபோன்று பிக்பாஸ் வீட்டின் தலைவராக முடியாமல் மன வருத்தத்தில் இருக்கும் தனலட்சுமி, வழக்கு தொடர்ந்துள்ளார். தனலட்சுமியின் வழக்கறிஞராக ஆயிஷா ஆஜராகிறார். தனலட்சுமிக்கு ஐவிட்னஸாக மைனா நந்தினி, ஷிவின் ஆகிய இருவரும் ஆஜராக வேண்டும் என்று கூறிய நிலையில் அவர்கள் அதனை மறுத்துவிட்டனர். இதனால் கடுப்பாகும் தனலட்சுமி, இனி என் கேமை பார்ப்பீங்க என கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


 

Share this story