இந்த வாரம் வெளியேற போவது யார் ?.. டேஞ்சர் ஜோனில் 4 பேர் !

biggboss 6

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் பட்டியலில் நால்வர் உள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது வாரத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம் ஒருவர் வீதம் போட்டியாளர் ஒருவர் வெளியேறி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று பரபரப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

biggboss 6

இந்த வார நாமினேஷில் அசீம், அமுதவாணன், மணிகண்டன், தனலட்சுமி, கதிரவன், ராம், ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டோர் உள்ளனர். அதில் மிகவும் அபாய கட்டத்தில் மணிகண்டன், ராம், ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன் ஆகிய நால்வர் உள்ளனர். அதனால் இந்த நால்வரில் ஒருவர்தான் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

biggboss 6

ஆனால் டாஸ்க்குகளில் விளையாடியதால் அசீமுக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதனால் இந்த வார நாமினேஷில் இருந்து அசீம் காப்பாற்றப்பட்டுள்ளார். அதேபோன்று தனலட்சுமிக்கும் அதிக வாக்குகள் பெற்றிருப்பதால் அவரும் வெளியேற மாட்டார் என தகவல் கசிந்துள்ளது. 

Share this story