அடடே.. பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுவது இவரா ?

biggboss 6

பிக்பாஸ் சீசன் 6-ல் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி நிறைவு பெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. அதனால் பிக் பாஸில் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் அசீம், விக்ரமன், அமுதவாணன், ஏடிகே, ஷிவின் கணேசன் உள்ளிட்ட ஏழு பேர் உள்ளனர். 

biggboss 6

இந்த வாரம் பிக்பாஸில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது.  இந்த டாஸ்க்கில் வெற்றிப்பெற்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிடலாம் என்பதால் போட்டி கடுமையாக இருந்தது. இந்த டாஸ்க்கில் பல கடுமையான சவால்களை சந்தித்து அமுதவாணன் விளையாடினார். அதனால் அவர் வெற்றிப்பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

biggboss 6

 அமுதவாணனை தவிர மற்ற 6 பேர் நாமினேனில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஒருவரும், அடுத்த வாரம் இருவரும் வெளியேற்றப்பட உள்ளனர். கடைசியாக இறுதிப்போட்டிக்கு நான்கு பேர் மட்டுமே செல்வர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவின் கணேசன் வெளியேற்றப்பட உள்ளார். இது குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story