சண்டைப் போட்டவங்களாம் இப்போ ஒன்னா சேர்ந்துட்டாங்க... பிக்பாஸ் புதிய ப்ரோமோவால் ரசிகர்கள் குழப்பம் !

biggboss 6

பிக்பாஸ் சீசன் 6 ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குழப்பியுள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் தற்போது 7 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களின் யார் டைட்டில் வின் செய்வார் என்ற பரபரப்புடன் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு அமுதவாணன் சென்றுவிட்டதால் மீதமுள்ளவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்ற பதற்றம் உருவாகியுள்ளது. 

biggboss 6

இந்த வாரம் டாஸ்க் எதுவும் கொடுக்கப்படாததால் ஹவுஸ்மேட்டுகள் ஜாலியாக இருக்கின்றனர். அதேநேரம் கதிருக்கு பிக்பாஸ் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பிக்பாஸ் சீட்டில் அமர்ந்து போட்டியாளர்களிடம் கதிர் கேள்வி கேட்கிறார். அதன்படி இந்த வீட்டில் யார் பெஸ்ட் என ஒருவரை தேர்ந்தெடுக்க சொல்லி பிக்பாஸாக இருக்கும் கதிர் கூறுகிறார். 

biggboss 6

அந்த வகையில் முதலில் பேசும் ஏடிகே, மைனா நந்நினியை தான் சிறந்த போட்டியாளர் என்றும், அனைவரிடம் மிகவும் மனிதநேயத்துடன் இருக்கும் என்று கூறுகிறார். இதையடுத்து அசீம் தான் பெஸ்ட் என்று விக்ரமும், விக்ரம் தான் பெஸ்ட் என்று அசீமும் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் ஆரம்பித்ததிலிருந்து கடந்த வாரம் வரை ஒருவொரையொருவர் அடித்த கொண்ட நிலையில் தற்போது அன்பு பரிமாறுவது ரசிகர்களை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  விளையாடுக்காக இப்படி கேவலமாக பேசுவதா சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 


 

Share this story