எல்லாமே செட்டப் தான்... அறம் தோற்றது.. அசீம் வெற்றியை விளாசிய நெட்டிசன்கள் !

biggboss 6

விக்ரம் வெற்றிப் பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அசீமுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்ததை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று மாலை நடைபெற்றது. இதில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவரும் இறுதிப்போட்டியாளராக இருந்தனர். வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். இதற்கிடையே பிரம்மாண்டமான மேடையில் கோலாகலமான கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதை அனைவரும் கண்டுகளித்து வந்தனர். 

biggboss 6

இந்தப்போதிலும் யார் டைட்டில் வின்னர் என்ற ஆர்வம் அனைவரிடமும் இருந்த நிலையில் இறுதியாக அசீம் வெற்றிப்பெற்றதாக கமல் அறிவித்தார். அவருக்கு டைட்டில் வின்னர் பட்டமும் 50 லட்சம் ரொக்கமும் அளிக்கப்பட்டது. அதேபோன்று டைட்டில் வின் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை ஷிவினுக்கும் அளித்தனர். 

biggboss 6

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமிற்கு இரண்டாம் இடம் கொடுத்ததும், அசீம் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் சமூக வலைத்தளங்களில் அசீம் வெற்றியை விளாசி தள்ளினர். 

biggboss 6

சக போட்டியாளரை மதிக்காதவர் அசீம். கமலே பலமுறை எச்சரித்து திட்டியிருக்கிறார். ரெட் கார்டு கொடுத்து அனுப்பவேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வந்தனர். ஆனால் விக்ரமன் மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துக் கொண்டார். இப்படி இருக்கையில் அசீமுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்தது ஏமாற்று வேலை என்று சரமாரியாக குற்றச்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே விக்ரம் டைட்டில் வின்னராக வேண்டியது. சில அரசியல் குறுக்கீடு வந்ததால் தான் கடைசி நேரத்தில் இந்த முடிவு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

Share this story