அசீமை கண்டிக்கும் கமல்.. குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய வீடியோ வெளியீடு !

biggboss 6

தனலட்சுமிக்கு எதிரான புகாரில் அசீமுக்கு கமல் குறும்படம் போடும் ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சீசனை விட பொம்மை டாஸ்க்கில் பெரிய ரகளையே உண்டாகியுள்ளது. இந்த டாஸ்க்கில் விளையாடும் போது ஷெரீனாவை தனலட்சுமி தள்ளிவிட்டதாக ஒரு டிராமா அரங்கேறுகிறது. இதில் ஷெரீனாவிற்கு சப்போட்டாக அசீம், மகேஸ்வரி, அசல் கோலார் உள்ளனர். 

biggboss 6

ஆனால் ஷெரீனாவை நான் தள்ளிவிடவில்லை என்றும், அப்படி நான் தான் தள்ளிவிட்டேன் என்று நிரூபித்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற தயாராகவிருப்பதாகவும் துணிச்சலுடன் தனலட்சுமி கூறினார். தனலட்சுமியின் இந்த தைரியமான பேச்சு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

biggboss 6

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அசீமிடம் கமல் கேட்க, அதற்கு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் அசீம். ஆனால் நான் ஷெரீனாவை தள்ளிவிட வில்லை என்று மீண்டும் உறுதிப்பட கமலிடம் தனலட்சுமி கூறினார். இதையடுத்து பேசும் கமல், உங்களிடம் நான் எதையும் கேட்க விரும்பல. நீங்க என்ன சொல்ல போகிறீங்கன்னு எனக்கு தெரியும். உங்களை நான் விமர்சிக்க மாட்டேன். கண்டிக்கிறேன் என்றார். இப்படி அடுத்தடுத்து அசீமை எச்சரிப்பது பிக்பாஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

Share this story