குயின்ஸி காலில் விழுந்த ஜனனி... ஓவர் சீன் போடும் குயின்ஸியால் டென்ஷனாகும் ரசிகர்கள் !

biggboss

குயின்ஸி - ஜனனி இடையே மோதல் ஏற்பட்டுள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

மகேஸ்வரி மற்றும் அசீம் பிரச்சினை முடிந்த நிலையில் அடுத்து குயின்ஸி மற்றும் ஜனனி இடையே மோதல் உருவாகி உள்ளது. குயின்ஸி டவலை தெரியாமல் ஜனனி எடுத்துவிடுகிறார். இதை பார்த்த குயின்ஸி அனைவர் முன்னிலையிலும் ஜனனி திட்டுகிறார். ஜனனி எவ்வளவோ சொல்லியும் அதை குயின்ஸி கேட்கவே இல்லை. 

biggboss

ஜனனி என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்க மறுக்கிறார் குயின்ஸி. அதனால் வேறு வழியில்லாமல் குயின்ஸியின் காலில் விழுகிறார் ஜனனி. இதனால் பிக்பாஸ் வீட்டில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்படுகிறது. ஜனனி காலில் விழுந்த பிறகும் கூட அந்த விஷயத்தை பற்றி திரும்ப திரும்ப பேசி கடுப்பேற்றுகிறார் குயின்ஸி. இதனால் கடுப்பான ஜனனி கையில் இருந்த காபி கப்பை போட்டு உடைத்து தனது கோபத்தை காட்டுகிறார். 

biggboss

டாஸ்க் விளையாடும்போது ஏற்பட்ட வன்மம் காரணமாகவே நேரம் பார்த்து ஜனனியை  பழிவாங்குகிறார் குயின்ஸி. ஒவ்வொரு போட்டியாளர்களிடம் இதுபோன்றுதான் குயின்ஸி நடந்துக் கொள்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததிலிருந்தே விளையாடுவதில் குயின்ஸி கவனம் செலுத்தவில்லை. ஆனால் புறணி பேசுவது, தேவையில்லாமல் கோபப்படுவது உள்ளிட்டவைகளை மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


 


 

null


 

Share this story