நாரதர் வேலையை ஆரம்பித்த சுரேஷ் சக்ரவர்த்தி... குழப்பத்தில் போட்டியாளர்கள் !

biggboss 6

பிக்பாஸ் வீட்டில் சுரேஷ் சக்ரவர்த்தி சிறப்பு விருந்தினராக வந்துள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

மிகவும் பரபரப்புடன் சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி நிறைவுபெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது 7 போட்டியாளர்களில் ஒருவர் டைட்டிலை வின் செய்ய போராடி வருகின்றனர். 

biggboss 6

வழக்கமான பிக்பாஸ் இறுதி வாரத்திற்கு முன்னர் கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக உள்ளே வந்து தற்போது உள்ள போட்டியாளர்களின் குறைகளை கூறுவார்கள். அந்த வகையில் இன்றைக்கு சிறப்பு விருந்தினராக சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். 

biggboss 6

 அவர் போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்ளும் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஏடிகேடிவை ஊர் கிழவி என்றும், அமுதவாணனை ஊறுகாய் கிழவி என்று விமர்சிக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தியின் இந்த பேச்சு போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அதேபோன்று இப்படியெல்லாம் பேசலாமா என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

 
 

Share this story