பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் இவர்கள் தான்... கசிந்தது புதிய தகவல் !

bigboss 7

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  ‌ 

விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சினிமா உலகின் ஜாம்பவான் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதனால் இந்த நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு சீசனிலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களை வைத்துதான் அந்த நிகழ்ச்சி ரசிகர்களை கவருமா என தெரியும். 

bigboss 7

அந்த வகையில் ஏற்கனவே விஜய் டிவி பிரபலங்களான சூப்பர் சிங்கர் புகழ் மாகாபா ஆனந்த், KPY சரத், உமா ரியாஸ், பாவானா ஆகியோர் பங்கேற்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர வழக்கம்போல் சீரியல் நட்சத்திரங்கள், சினிமா பிரபலங்கள், டிரெண்ட்டிங்கில் இருக்கும் நபர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி சீரியல் நடிகர் பப்லு என்ற பிரித்விராஜ், 'தேன்மொழி' சீரியல் மூலம் பிரபலமான ஜாக்குலின், 'ஈரமான ரோஜா' சீரியல் நடிகர் தினேஷ், பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தில் நடித்த ரேகா நாயர், நடன இயக்குனர் ஸ்ரீதர், கோவையை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story