பக்கா பிளான்: வைல்ட் கார்டு போட்டியாளர்களை ஓரம் கட்டும் பழைய ஹவுஸ் மேட்ஸ்.

photo

 பிக்பாஸ் சீசன் 7 துவங்கி ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் போட்டி பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது. அதை மேலும் சூடுபிடிக்க வைக்க வைல்ட் கார்டு போட்டியாளர்கள் 5 நபர்களை களமிறக்கியுள்ளனர் பிக்பாஸ் டீம். அவர்கள் உள்ளே நுழைந்ததும் என்ன நடந்தது என்பதற்கான அனல்பறக்கும் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

photoவழக்கம் போல கேப்டன் கூறும் 6 நபர்கள் சுமால் பாஸ் ஹவுசுக்கு செல்ல வேண்டும் அதன்படி, இந்த வாரம் பூர்ணிமா கேப்டனாக உள்ளார். அவர் பக்காவாக பிளான் போட்டு புதிதாக வந்த அர்ச்சனா, தினேஷ், பிராவோ, அன்ன பாரதி, கானா பாலா மற்றும் பழைய போட்டியாளரான விசித்ரா ஆகிய 6 நபர்களை சுமால் பாஸ் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

அதில் அர்ச்சனா ‘நீங்க எல்லாரும் பிளான் பண்ணி இத பண்றீங்களா?’ என கேட்க, கேப்டனான பூர்ணிமாவும் ‘ஆமாங்க இத நான் பிளான் பண்ணிதான் பண்றேன்’ என கூறியுள்ளார். இதனால் முதல் வாரமே பழைய போட்டியாளர்களுக்கும், புதிய போட்டியாளர்களுக்கும் முட்டிக்கொண்டுள்ளது. தொடர்ந்து என்ன நடக்க உள்ளது என்பதை பார்க்கலாம்.

Share this story