ஜீ தமிழ் சீரியல் ஜோடிக்கு விரைவில் திருமணம்.. யார் அவங்க தெரியுமா ?

britto mano with sandhiya

 ஜீ தமிழ் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்தவர் விரைவில் ரியல் ஜோடியாக மாறவுள்ளனர். 

ஜீ தமிழில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று சீரியல் ‘தவமாய் தவமிருந்து’. இந்த சீரியல் வயதான பெற்றோருக்கு பிள்ளைகள் துரோகம் செய்யும் கதைக்களம் கொண்டது. இந்த சீரியலில் பிரிட்டோ மனோ - சந்தியா ராமச்சந்திரன் ஜோடி ரசிகர்களிடையே வரவேற்பை ஜோடியாக உள்ளது. 

britto mano with sandhiya

இந்நிலையில் சீரியலில் ரீல் ஜோடியாக இருக்கும் பிரிட்டோ மனோ - சந்தியா ஜோடியாக தற்போது ரியல் ஜோடியாக மாறவுள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி 25-ஆம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தினர். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

britto mano with sandhiya

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டடித்த ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் அறிமுகமானவர் பிரிட்டோ மனோ. இந்த சீரியல்களுக்கு பிறகு காண காணும் காலங்கள், ராஜா ராணி 2 உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Share this story