பிரபல சீரியலுக்கு என்டுகார்டு... ரசிகர்கள் அதிர்ச்சி !

idhayathai thirudathe 2 serial

 கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியல் விரைவில் நிறைவுபெற உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழ் தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகிறது. அதில் ஒரு சில சீரியல்கள்தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவையாக இருக்கும். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் ‘இதயத்தை திருடாதே’. இந்த சீரியலின் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. 

idhayathai thirudathe 2 serial

இந்த சீரியலின் கதாநாயகனாக சிவா கதாபாத்திரத்தில் நடிகர் நவீன் குமாரும், கதாநாயகியாக சஹானா கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து வருகின்றனர். காதல் கதைக்களத்தில் உருவாகி ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் நவீன் - ஹிமா பிந்துவின் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தவையாக இருந்து வருகிறது. 

idhayathai thirudathe 2 serial

மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியல் தற்போது பரபரப்பு திருப்பங்களுடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலை விரைவில் முடிக்க உள்ளனராம். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதையடுத்து ‘இதயத்தை திருடாதே’ மூன்றாவது சீசன் உருவாகுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Share this story