பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ கிராண்ட் பினாலே.. டைட்டிலை தட்டித்தூக்கி பிரபல போட்டியாளர்கள்

comedy raja kalakkal rani
 காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேவில்  டி.எஸ்.கே மற்றும் சுனிதா ஜோடி வின்னர் பட்டத்தை வென்றது. 

புதுபுது நிகழ்ச்சிகளை கொடுத்து ரசிகர்களை  தினறடித்து வருகிறது விஜய் டிவி. அதிலும் காமெடி நிகழ்ச்சிகள் என்றால் சொல்லவே தேவையில்லை. கோடிக்கணக்கான பார்வையாளர்களை கொண்ட விஜய் டிவியில் தற்போது ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி 'காமெடி ராஜா கலக்கல் ராணி'.  வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி ஷோக்களின் காமெடியன்கள், அழகிய சீரியல் நடிகைகளுடன் சேர்ந்து காமெடி செய்து வருகிறார்கள். 

comedy raja kalakkal rani

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக மதுரை முத்து, பாபா பாஸ்கர், நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் இருந்தனர். போட்டியாளர்களாக ராஜு - நிஷா, புகழ் - அர்ச்சனா, ராமர் - தீபா, பாலா - ரித்திகா, யோகி - ஷப்னம்,  தர்ஷா குப்தா - ராஜ வேலு, சுனிதா - டிஎஸ்கே, வினோத் பாபு - பிரனிகா, சதீஷ் - காயத்ரி, ஜெயச்சந்திரன் - அர்ச்சனா ஆகியோர்  பங்கேற்று கலக்கி வந்தனர். 

comedy raja kalakkal rani

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று கோலகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் ஜீவா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  10 ஜோடி போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், டி.எஸ்.கே காமெடி ராஜாவாகவும், சுனிதா கலக்கல் ராணியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   இந்நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற டி.எஸ்.கே மற்றும் சுனிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

Share this story