‘குக் வித் கோமாளி 4’-ன் முதல் இறுதிப்போட்டியார்... யாருன்னு தெரியுமா ?
‘குக் வித் கோமாளி 4’ நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் தேர்வாகியுள்ள முதல் போட்டியாளர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாகி வருகிறது ‘குக் வித் கோமாளி’. சமையலுடன் காமெடியும் கலந்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் வெற்றிக்கரமாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர்.
தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இறுதிப்போட்டிக்கு செல்லும் 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதில் முதல் ஆளாக நம்ம சிவாங்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்கமாக கோமாளியாக களமிறங்கி வந்த சிவாங்கி இந்த முறை போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் அவரது சமையலில் முன்னேற்றம் காணப்படுகிறது. அதனால் இம்யூனிட்டி சுற்றில் சிவாங்கி வெற்றிப்பெற்றுள்ளார். 5 பேரில் முதல் ஆளாக சிவாங்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்த எபிசோடுகளில் மீதமுள்ள 4 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என தெரிகிறது.