மதம் மாறிவிட்டாரா 'குக் வித் கோமாளி' மணிமேகலை... இணையத்தில் உலா வரும் புகைப்படத்தால் சர்ச்சை !

manimegalai

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான மணிமேகலை மதம் மாறிவிட்டதாக தகவல் ஒன்று பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சின்னத்திரையில் நட்சத்திர தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சன் மியூசிக் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், சன் டிவியிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதன்பிறகு விஜய் டிவிக்கு சென்ற அவர், 'மிஸ்டர் அணட் மிஸ்ஸஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

manimegalai

பின்னர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு சென்ற அவர் தொடர்ந்து கோமாளியாக கலக்கி வந்தார். மணிமேகலையின் கோமாளித்தனத்தை பார்க்க ஒரு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. இதற்கிடையே நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக இருந்த ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்ட அவர்கள், தற்போது தனியாக வாழ்த்து வருகின்றனர்.‌ 

manimegalai

இந்நிலையில் தனது கணவர் ஹூசைனுடன் இஸ்லாமிய உடையில் மணிமேகலை  இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் மணிமேகலை இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டாரா என்று கேள்வி எழுப்பி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Share this story