பெண்ணாக மாறிய பிரபல நடிகர்... யார் அவர் தெரியுமா ?

pugazh

 பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகர் புகழ் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியில் கோமாளியான நடித்து பட்டி தொட்டியெல்லாம் உள்ள மக்களிடையே பிரபலமாகியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து சினிமாவில் பிசியான நடிகராக மாறியுள்ளார். 

குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், சூர்யா, சந்தானம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார். இதையடுத்து புதிய படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். இதுதவிர ‘ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.  

pugazh

இந்நிலையில் பெண்ணாக மாறிய புகைப்படம் ஒன்றை நடிகர் புகழ் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்காக தயாரான இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.  இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.‌

Share this story