சீக்கிரம் தயாராகுங்க.. வெளியானது ‘குக் வித் கோமாளி’ அடுத்த சீசன் அறிவிப்பு !

cook with comali 4

 குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்நோக்கும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன் நிறைவுபெற்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடைசி சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

cook with comali 4

இந்த நிகழ்ச்சி வெறும் சமையல் நிகழ்ச்சியாக இல்லாமல் வித்தியாசமாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கும். அதாவது சமையலும், காமெடியும் தான் இந்த நிகழ்ச்சியின் ஐலைட். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செப் தாமோதரன் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும் உள்ளனர். 

cook with comali 4

இந்நிலையில் 4வது சீசனுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ப்ரோமோ வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கம் போல் விஜே ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த சீசனில் ஓட்டேரி சிவா, ஜிபி முத்து உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

Share this story