'குக் வித் கோமாளி சீசன்4'ன் வெற்றியாளர் இவரா? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.

photo

பலருக்கும் விருப்பமான ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் குக்குகளும், கோமாளிகளும் செய்யும் அட்ராசிட்டி, காமெடி, கலகலப்பான பேச்சு என அனைத்தும் எக்கசக்கமான ரசிகர்களை பெற்றது. தற்போது நான்காவது சீசனில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோ இறுதிகட்டத்தில் உள்ளது. அதன்படி விசித்ரா, சிவாங்கி, மைம் கோபி, ஸ்ருஷ்டி, கிரண் ஆகியோர் பைனல்ஸுக்குள் நுழைந்துள்ளனர். தொடர்ந்து கடந்தவாரம் நடந்த வைல்டு கார்டு சுற்றில் ஆண்ரியா வெற்றிபெற்று ஆறாவது நபராக  இறுதிபோட்டியாளராக நுழைந்தார்.

photo

இந்த நிலையில் அண்மை செய்தியாக சிவாங்கி மற்றும் ஆண்ரியா இருவரும் டைட்டிலுக்கு மிக அருகில் இருப்பதாகவும் இருவரில் யாரேனும் ஒருவர் சீசன் 4ன் வெற்றியாளராக இருப்பர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் மிக அருமையாக சமைக்க கூடியவர்கள் என்பதால் யாராக இருக்கும் என்பதை யூகிக்க ரசிகர்களுக்கு சற்று சிரமமாக உள்ளது. தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story