அட டைட்டில் வின்னர் இவரா ?... 'குக் வித் கோமாளி 4'- ல் கடைசி நேர ட்விஸ்ட் !

cook with comali 4

'குக் வித் கோமாளி 4' நிகழ்ச்சியில் எதிர்பார்க்காத போட்டியாளர் ஒருவர் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரசிகர்களின் பேவரிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது 'குக் வித் கோமாளி'. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன்  ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகை வனிதாவும் இரண்டாவது சீசனில் கனியும் மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் டைட்டில் பட்டதை வென்றனர். 

cook with comali 4

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய 'குக் வித் கோமாளி' நான்காவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. அதில் விசித்ரா, சிவாங்கி, மைம் கோபி, ஸ்ருஷ்டி, கிரண், வெளிநாட்டு நடிகை ஆண்ட்ரியன் ஆகியோர் இறுதி போட்டியாளராக உள்ளனர். 

cook with comali 4

இந்நிலையில் 'குக் வித் கோமாளி 4' நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் சிவாங்கி அல்லது ஆண்ட்ரியன் ஆகிய இருவரில் ஒருவர் வெற்றிப்பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மை கோபி டைட்டில் பட்டத்தை வென்றுள்ளார். கடைசியாக நடைபெற்ற மூன்று சீசன்களிலும் பெண்களே வென்ற நிலையில் முதல் முறையாக ஒரு ஆண் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story