சுவாரஸ்சியமாக செல்லும் ‘குக் வித் கோமாளி 4’... இந்த வாரம் வெளியேறும் நபர் இவர்தான் !

CookuWithComali 4

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

பொதுவாக சமையல் நிகழ்ச்சிகள் பெரிய வரவேற்பை பெறுவதில்லை. ஆனால் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு காரணம் சமையலோடு கலந்த காமெடி தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம். 

CookuWithComali 4

அந்த வகையில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் வெற்றிக்கரமாக நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து 4வது சீசன் தற்போது சுவாரஸ்சியமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளராக நடிகைகள் ஷெரின், சிருஷ்டி டாங்கே, நடிகர் ராஜ் ஐயப்பன், விஜே விஷால், சிவாங்கி, காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரியன் நெளரிகட், மைம் கோபி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

CookuWithComali 4

 இதுதவிர கோமாளிகளாக புகழ், பாலா, மணிமேகலை, தங்கதுரை, சுனிதா, ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிச சிவா, குரோஷி உள்ளிட்டோர் செய்யும் கலாட்டாக்கள் தாங்க முடியவில்லை. அதோடு இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இந்த வாரம் நடிகை ஹன்சிகா பங்கேற்றுள்ளார். அதனால் நிகழ்ச்சியை காண மிகவும் ஆர்வமுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அதில், விஷால், மை கோபி ஆகிய மூவரிடையே கடும் போட்டி நிலவியது. இதில் மைம் கோபி தான் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

 

Share this story