‘குத் வித் கோமாளி’ ஷோவிற்கு வந்த ஹன்சிகா.. சர்ப்ரைஸான போட்டியாளர்கள் !

cooku with comali

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு நடிகை ஹன்சிகா வந்ததால் போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். 

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. சமையலுடன் காமெடி கலந்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி அனைவரையும் ரசிக்க வைக்கிறது. அந்த வகையில் தற்போது ‘குக் வித் கோமாளி சீசன் 4’ நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. 

cooku with comali

இந்த சீசனில் மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர். இந்த சீசனில் குக்காக மாறியுள்ள சிவாங்கி, முதல் முறையாக இந்த வாரம் குக் ஆஃப் தி வீக் பட்டத்தை பெற்றுள்ளார். 

cooku with comali

இந்நிலையில் இந்த வாரம் ‘குக் வித் கோமாளி சீசன் 4‘ நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் நடிகை ஹன்சிகா சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். தற்போது இதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. 


 

 

Share this story