'குக்வித் கோமாளி சீசன் 4'ல் யாரெல்லாம் கலந்துக்க போறாங்க தெரியுமா!...- வெளியான முழு லிஸ்ட்.

photo

சமையல் கலையை மக்கள் ரசிக்கும் வண்ண மிக ஸ்வாரசியமாகவும் நகைச்சிவை கலந்தும் மக்களுக்கு வழங்கி வருகிறது ‘குக்வித் கோமாளி’ நிகழ்ச்சி. இது வரை மூன்று சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய நிலையில் இந்த வாரம் நான்காவது சீசன் துவங்க உள்ளது. சமீபத்தில் அதற்கான புரொமோ வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யாரெல்லாம் குக்குகளாக கலமிறங்க இருக்கின்றனர் என்ற சூப்பர் தகவல்  வெளியாகியுள்ளது.

photo

அதன்படி ஸ்ருஷ்டி டாங்கே, Andreanne Nouyrigat என்ற வெளிநாட்டு நடிகை, ஷெரின், ராஜ் ஐயப்பா, VJ விஷால், காளையன், விசித்ரா, கிஷோர் ராஜ்குமார் மற்றும் வழக்கமாக கோமாளியாக வந்து நம்மை சிரிக்க வைத்த சிவாங்கி இந்த முறை புரொமோட்டாகி குக்காக மாறியிருக்கிறார்.

photo

குக்குகளை தொடர்ந்து கோமாளியாக இந்த முறை டிக்டாக் புகழ் ஜிபி முத்து களமிறங்க இருக்கிறார். அதனால இந்த சீசனிற்கான எதிர்பார்ப்பு வழக்கத்தை விட கூடுதலாக உள்ளது. 

Share this story