சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற கூல் சுரேஷ்- இதோ வீடியோ!

photo

பிக்பாஸ் சீசன் 7, 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளர்களுள் ஒருவராக உள்ள கூல் சுரேஷ் சுவர் ஏறி தப்ப முயலும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளது.


தொடர்ந்து போட்டி கடுமையாக மாறி வரும் நிலையில் உளவியல் ரீதியாக சமாளிக்க முடியாமல் பலர் தடுமாறி வருகின்றனர். அதில் ஒருவராக உள்ள கூல் சுரேஷ், போட்டியாளர்களிடம் இந்த வாரம் தன்னை நாமினேட் செய்யும் படி கெஞ்சினார். தொடர்ந்து பலரும் அவரை நாமினேட் செய்தனர். அதனால் அவர் நாமினேஷன் லிஸ்டிலும் இணைந்து விட்டார். இந்த நிலையில் கூல் சுரேஷ் சுவர் ஏறி தப்ப முயலும் வீடியோ வெளியாகியுள்ளது. அதன் மேலே செல்ல முடியாமல் மணி உதவியுடன் கீழே இறங்குகிறார். இதற்கு முன்னர் பிக்பாஸ் வரலாற்றில் பரணி இப்படி செய்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story