உயிரிழந்த தீபா.. கதறி அழுத கார்த்திக்! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

karthigai deepam

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மடியில் தீபா உயிரை விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 

தீபாவின் இறப்பை தாங்க முடியாமல், மொத்த குடும்பமும் கண்ணீரில் தத்தளிக்கின்றனர். அதன் பிறகு தீபாவை அடக்கம் செய்யும் வேலைகள் நடக்கின்றன. அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் தீபாவையும் பற்றியும் தீபா மருமகளாக வந்தது பற்றியும் கண்ணீருடன் பேசி கொள்கின்றனர். தீபாவின் பிரிவை தாங்க முடியாமல் அனைவரும் தவிக்கின்றனர்.
இதையடுத்து போலீஸ் கார்த்திக் வீட்டிற்கு வந்து கீதாவை கைது செய்ய வந்ததாக சொல்கிறார்கள். கார்த்திக் கீதாவிடம் நீங்க பயப்படாமல் இவங்க கூட போங்க.. உங்களுக்கு வாக்கு கொடுத்த மாதிரி நான் உங்களை காப்பாற்றுகிறேன்.

உங்களை கண்டிப்பா வெளியே கொண்டு வருவேன் என்று சொல்ல, கீதா போலீசாரால் கைது செய்யப்பட்டு, அழைத்து செல்லப்படுகிறாள். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது. வரும் திங்கள் முதல் புத்தம் புதிய கிராமத்து கதையில் புதிய கதாபாத்திரங்களுடன் இந்த கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

karthigai deepam
தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று கார்த்திகை தீபம். கார்த்திக் ராஜ், ஆர்த்திகா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல், மக்களின் மனங்களை கவர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த சீரியல் வரும் திங்கள் முதல் புத்தம் புதிய கிராமத்து கதைக்களத்தில், புது நட்சத்திரங்களுடன் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ரேஷ்மா பசுபுலேட்டி கார்த்திக்கின் அத்தையாக சாமுண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், கார்த்திக்கு ஜோடியாக ஜீ கேரளம் சேனல் மூலமாக பாப்புலரான வைஷ்ணவி நடிக்க உள்ளார். மேலும் பழம்பெரும் நடிகர்களாக விஜயகுமார், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

Share this story