சூப்பர் ஹிட் சீரியலால் வெடித்த பூகம்பம்... 100 கோடி கேட்டு பிரபல தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் !

deivamagal serial

சூப்பர் ஹிட் சீரியலை வேறு மொழியில் ஒளிப்பரப்பியதால் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சன் டிவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

தமிழ் சின்னத்திரை சன் டிவி சீரியல்கள் என்றாலே அது ரகம்தான். இந்த தொலைக்காட்சியில் நீண்ட நாட்களாக பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. டிஆர்பியில் நல்ல ரேட்டிங் இருக்கும் இந்த சீரியல்களை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர். 

deivamagal serial

அந்த வகையில் கடந்த 2013 முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஒளிப்பரப்பான சீரியல் ‘தெய்வமகள்’. கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒளிப்பரப்பான இந்த சீரியலில் நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகை வாணிபோஜன் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் வாணிபோஜனின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.  

deivamagal serial

இந்த சீரியல் சன் குழுமத்தின் பொங்காலி மொழி சேனலான பங்களா டிவியில் ‘டிபி’ என்ற பெயரில் கதாபாத்திரங்களின் பெயரை மட்டும் மாற்றி ஒளிப்பரப்பாகி வருவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இந்த சீரியலை அனுமதியில்லாமல் பொங்காலி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிப்பரப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீரியலை தயாரித்த நிறுவனமான விகடன், சன் டிவி நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

அந்த நோட்டீசில் 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஷயம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story