‘அன்பே வா’ தொடரிலிருந்து விலகிய நடிகை ‘டெல்னா டேவிஸ்’.

photo

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடரில் பூகா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் நடிகை டெல்னா டேவிஸ். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் திடீரென அந்த தொடரிலிருந்து விலகப்போவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

photo

கேரளாவை சேர்ந்த நடிகை டெல்னா, நடிகை என்பதை தாண்டி ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் மலையாளத்திலும் சில சீரியல்களில் நடித்துள்ளார்.  தற்போது தமிழில் நடித்துவருகிறார். இந்த நிலையில் சீரியலிருந்து விலகப்போவதை அறிவித்த டெல்னா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது” அன்புள்ள அன்பேவா குடும்பமே தொடரிலிருந்து நான் விடைபெறுகிறேன். என் வாழ்வில் மிக முக்கியம் வாய்ந்தது இந்த தொடர். உங்கள் அன்பு இந்த பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியது. புரொடக்ஷன் மற்றும் சன்டீவிக்கு நன்றி இந்த தொடரில் நானும் ஒரு அங்கமாக இருந்ததற்காக பெருமைப்படுகிறேன். தொடர்ந்து தொடருக்கு ஆதரவு கொடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Share this story