மீண்டும் சீரியலில் ரீஎண்ட்ரி கொடுக்கும் 'தேவயானி' –என்ன தொடர் தெரியுமா!

photo

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் முன்னணி ஹீரோக்களுடம் ஜோடிபோட்டு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தமிழை கடந்து தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.  வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் கால்பதித்து அங்கும் வெற்றி நாயகியாக வலம் வந்தவர் தேவையானி. குறிப்பாக இவர் நடித்த ‘ கோலங்கள்’ சீரியல்  90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல் லிஸ்டில் கண்டிப்பாக இருக்கும்.  தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழின் புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்தற்போது அந்த சீரியல் நிறைவடைந்த நிலையில் தேவயானி மீண்டும் ஒரு சீரியல் மூலமாக ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.

photo

அதாவது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘மாரி’ சீரியல் மூலமாக தான் அவர் தனது பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளார். முக்கியமான ரோலில் இனி அவர் நடிப்பார் என வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

photo

Share this story