கதறி அழுத தனலெட்சுமி- வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு அவமானமா இருக்கு பிக்பாஸ்.

photo

தமிழில் பிக்பாஸ் சீசன் 6  பர்பரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இன்று 36-வது நாளுக்கான எப்பிசோட் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி இன்றைய நாளுக்கான புரோமோவில் தனலெட்சுமி கன்ஃபெஷம் ரூமில் கதறி அழுகிறார். அதற்கு காரணம் என்ன என நாம் அறிந்ததே…. கடந்த ஞாயிற்று கிழமை எப்பிசோடில் கமலின் காரம் தூக்கலாம வறுவலே அதற்கு முழு பொறுப்பு.

photo

‘விழிப்புணர்வு படம், ஒளிபரப்பப்பட்டு தனலெட்சுமியின்' ஏமாற்றுவேளையை அம்பல படுத்திய கமல், விழுந்து விழுந்து சிரிப்பதற்கு இது வேடிக்கை அல்ல என சாட்டை அடிபோல உணர்த்தினார். அதிலிருந்தே கமல் சொல்லியது போல ‘மூஞ்சியை தூக்கி வைத்துகொண்டிருந்த தனலெட்சுமி’ இன்று பிரேக் டவுன் ஆகிவிட்டார் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

photo

"வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அவமானமாக இருக்கு, இந்த ஒரு சின்ன விஷயம் இவ்ளோ பெருசா வெடிக்கும் என எனக்கு தெரியாது. நான் நியாயமா விளையாடிகிட்டு இருக்கோன் கரெக்டா பேசிகிட்டு இருக்கன்னுதான் இவ்ளோ நாள் நினைச்சிகிட்டு இருந்தன். அவ்ளோ கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கோன் ஏதோ திருடிட்ட மாதிரி இருக்கு..” என கதறி அழுகிறார்.

photo

இவர் அழுவதை பார்த்தால் இனிமேல் விளையாட்டில் கவனம் செலுத்துவாரா இல்லை தாக்கு பிடிக்க முடியாமல் ஓட்டம் பிடிப்பாரா, என பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

 

 

Share this story