விவசாயிகள் பெருமை குறித்து பேசும் கிராமத்துப் பெண்ணாக கலக்கும் தர்ஷா குப்தா!
நடிகை தர்ஷா குப்தா கிராமப்புற பெண்ணாக ஜொலித்துள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த தர்ஷா குப்தா சோசியல் மீடியாக்களில் கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை ஈர்த்தார்.
தர்ஷாவின் போட்டோஷூட்களில் கவர்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது. அவளும் நானும் சீரியல் மூலம் விஜய் டிவியில் நுழைந்தார். தற்போது வெள்ளித் திரையிலும் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார்.

திரெளபதி இயக்குனர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகி வரும் ருத்ர தாண்டவம் படத்தில் தர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
செந்தூர பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்திலும் தர்ஷா நடித்து வருகிறார். சமீபத்தில் தர்ஷா குப்தா கிராமத்து பெண் லுக்கில் ஃபோட்டோ ஷூட் செய்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

"இந்த உலகில் நிரந்தரமானவர் என்று எவரும் கிடையாது.நிரந்தரமானது இயற்கையும் இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே. எந்த ஒரு மனிதனின் உழைப்பும் பணமாக மாறலாம். ஆனால் விவசாயின் உழைப்பு தான் நமக்கு உணவாக மாறும். எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும் என் நம்பிக்கை என்னை கை விடாது" என்றும் தெரிவித்துள்ளார்.






