‘சிஐடி’ தொடர் புகழ் ‘தினேஷ் பட்னிஸ்’ காலமானார்.

photo

சிஐடி தொடரில் நடித்து பிரபலமான நடிகர் தினேஷ் பட்னிஸ் காலமானார். அவருக்கு வயது 57.

photo

1998 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் ‘சிஐடி’. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அந்த தொடரில் ஃபிரெட்டிக்ஸ் என்ற கதாப்பத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் தினேஷ் பட்னிஸ். இவர் நிறைய படங்களிலும் நடித்துள்லார்.

photo

இவர் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மும்பையில் உள்ள  மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். இருந்த போதிலும் கல்லீரல் பாதிப்பால் நேற்று முன்தினம் காலமானார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Share this story