மீண்டும் கம்பேக் கொடுக்க தயாரான 90’ஸ் கிட்ஸ் பேவரைட் சீரியல் இயக்குநர்.

photo

சின்னத்திரை சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபமானவர் இயக்குநர் திருமுருகன். இவர் மீண்டும் சீரியல் இயக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

1998 ஆம் ஆண்டு தூர்தஷனில் ‘கோகுலம் காலனி’ தொடர் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து நல்லூர் காவல்நிலையம்,அக்ஷயா, பஞ்சவர்ணகிளி, அப்பு குப்பு, துரு பிடிக்கும் மனசு என பல சீரியலை இயக்கியுள்ளார். என்னதான் இவர் பல தொடர்கள் இயக்கி இருந்தாலும் திருமுருகனை பிரபலமாக்கியது சன்டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடர். அந்த தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து  நடிகராக மிகவும்  பிரபலமானார். அந்த தொடரின் அமோக வெற்றியை தொடர்ந்து சுமார் 5 ஆண்டுகள் கழித்து ‘நாதஸ்வரம்’ தொடரை இயக்கி நடித்தார். தொடர்ந்து பல சீரியல்களை இயக்கிய அவர் வெள்ளிதிரையிலும் கால் பதித்துள்ளார். எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என இரண்டு படங்ளை இயக்கியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர் சீரியல் மூலமாக கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share this story