‘மிகப்பெரிய இழப்பு……’ – ‘எதிர்நீச்சல்’ இயக்குநர் ‘திருச்செல்வம்’ வேதனை.
1694163837532

எதிர் நீச்சல் புகழ் மாரிமுத்து மரணம் தொடர்பாக அந்த தொடரின் இயக்குநர் திருச்செல்வம் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
திடீர் மாரடைப்பு காரணமாக இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமான செய்தி அனைவருக்கு பேரிடியாக விழுந்தது. இந்த நிலையில் இயக்குநர் திருச்செலவம் தனது வேதனையை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது “ இதை கொஞ்சம் கூட ஏத்துக்கவே முடியவில்லை. டப்பிங் பனிகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வருவதாக கூறினார். உடல்நிலை சரியில்லாமல் இருந்து இப்படி நடந்திருந்தால் அது வேறு, ஆனால் இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நிச்சயம் எதிர்நீச்சல் குடும்பத்துக்கு இவர் மரணம் பேரிழப்பு, ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவரது குடும்பத்தின் மனநிலையை யோசித்துக்கூட பார்க்கமுடியவில்லை. “ என கண்ணீருடன் தனது வேதனையை பகிர்ந்துகொண்டுள்ளார்.