டிவி நிகழ்ச்சியை இயக்கும் விக்னேஷ் சிவன்.... திடீர் முடிவிற்கு காரணம் என்ன ?

vignesh shivan

 சினிமாவில் பிசியான இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவன், திடீரென டிவி நிகழ்ச்சி ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘போடாபோடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘நானும் ரௌடிதான்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதன்பிறகு அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்திலிருந்து வெளியேறிவிட்டார். 

vignesh shivan

இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவன், தனது ரௌடி பிக்சர்ஸ் மூலம் சினிமா படங்களை தயாரித்து வருகிறார். அதோடு தனது அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் அவர் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர சில விளம்பர நிகழ்ச்சிகளையும் இயக்கி வருகிறார். 

இந்நிலையில் சினிமாவிலிருந்து சின்னத்திரையில் புதிய நிகழ்ச்சி ஒன்றை இயக்கவுள்ளார். அது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘காபி வித் டிடி’, ‘சிம்ப்ளி குஷ்பூ’ போன்ற நிகழ்ச்சிகள் போன்று பிரபலங்களை பேட்டியெடுப்பதாகும். ஏற்கனவே பிரபல சினிமா நட்சத்திரங்களாக இருக்கும் கமல், ராதிகா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

Share this story