பிக் பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம்..

big boss

பிக் பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் அரங்கேறியுள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக கவின் உள்ளே வந்துள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பமாகியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மூன்று வாரங்கள் நிறைவறைந்த நிலையில், கடைசியாக தர்ஷா வெளியேறியுள்ளார். தற்போது 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இவர்களில் 9 பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று தீபாவளி என்பதால் பிக் பாஸில் போட்டியாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புத்தாடை, பிரியாணி என்று பிக் பாஸ் வீடே களைகட்டியுள்ளது. இதில் கூடுதல் சிறப்பாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகர் கவின் சிறப்பு விருந்தினராக உள்ளே சென்றுள்ளார். அவர் நடிப்பில் வெளியாகி உள்ள பிளடி பெக்கர் திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றுடன் 25 நாள் முடிவதால் அதனை கேக் வெட்டியும் போட்டியாளர்கள் கொண்டாடியுள்ளனர்.

Share this story