‘ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணி இருப்பேன்’- ஈஸ்வரியின் பதிலால் தலைகுனிந்த குணசேகரன்.

நாளுக்கு நாள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்போடு ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல். ஜவ்வாக இழுக்கும் சீரியல்களுக்கு மத்தியில் திரைப்படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் உடன் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் இன்றைய தினத்துக்கான புரொமோ வெளியாகி மேலும் பரபரப்பபை கூட்டியுள்ளது.
அதாவது, ஈஸ்வரியின் அப்பா ஆதி குணசேகரனின் வீட்டிற்கு வந்து ஈஸ்வரியின் இளம் வயதில் அவரை பெண் கேட்டு வந்தவர் தான் ஜீவானந்தம் என்ற உண்மையை கூறுகிறார். இதனை கேட்ட அனைவரும் அதிர்ந்து போக குறிப்பாக ஆதி குணசேகரன் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிடுகிறார். அந்த சமயத்தில் நடந்ததை ரேணுகா ஈஸ்வரிக்கு தெரியபடுத்துகிறார். இதனுடன் நேற்றய எபிசோடு முடிந்தது. இன்றைய புரொமோவில் வீட்டிற்கு ஈஸ்வரி மற்றும் ஜனனி வருகின்றனர்.
ஈஸ்வரியிடம் சண்டையிடும் நோக்கில் ஆதிகுணசேகரன் மற்றும் கதிர் பேச அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கிறார் ஈஸ்வரி. குறிப்பாக “அப்போ உங்க அப்பா சரி சொல்லி இருந்தா?” என ஜீவானந்தன் பெண் கேட்ட விஷயம் குறித்து கேட்க சற்றும் யோசிக்காமல் “ அப்போ கல்யாணம் பண்ணி இருப்பேன்” என நச் பதில் கொடுக்க, ஆதி குணசேகரன் தலைகுனிந்து போகிறார். இத்துடன் புரோமோ முடிகிறது. தொடர்ந்து அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.