அடுத்த குறி அப்பத்தாவா? – ஆதிகுணசேகரனின் பலே திட்டம்.
ரசிகர்கள் மத்தியில் சக்கப்போடு போட்டு ஒளிபரப்பாகிவரும் தொடர் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியல் டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் சீரியலின் கதைகளம் மற்றும் நடிகர்களின் தத்ரூபமான நடிப்பு தான். கோலங்கள் புகழ் திருசெல்வம் இயக்கும் இந்த தொடரை அவர் இயக்குவது மட்டுமல்லாமல் ஜீவானந்தம் எனும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில் தனது அனைத்து சொத்துகளையும் ஜீவானந்தத்திடம் இழந்த ஆதி குணசேகரனுக்கு, அவன் தான் தனது மனைவியை காதலித்தவன் என்ற உண்மையும் தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர் விவாகரத்து முடிவை எடுக்கிறார்.அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே தற்போதைய கதை.
இந்த நிலையில் இன்றைய நாளுக்கான புரொமோ வெளியாகியுள்ளது அதாவது, குணசேகரனால் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட ஜனனி மற்றும் சக்தி இருவரும் அப்பத்தாவால் வீட்டுக்குள் மீண்டும் வருகின்றனர். இவை ஒரு புறம் நடக்க மற்றொரு புறம் அப்பத்தாவை போட்டுதள்ளிடலாமா என தனது வக்கீலுடன் பேசி வருகிறார் குணசேகரன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.